மகாவீர் கர்ணா படத்தில் விக்ரமின் கெட்டப் செம்ம மாஸாக உள்ளது.! வீடியோ இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம்.இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து அவர் தூள், ஜெமினி, அந்நியன், பிதாமகன், தெய்வத் திருமகள் போன்ற சிறந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

விக்ரம் அவர்கள் தற்பொழுது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை ஞானமுத்து அவர்கள் இயக்கி வருகிறார். இப்படத்தில் பல வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் பொன்னின் செல்வன், மகாவீர் கர்ணா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர் போனவர்கள் வெகு சிலரே அந்த வகையில் சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவர் விக்ரம்.

தினங்களுக்கு முன்பு பிறந்த நாளை கொண்டாடிய விக்ரம் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினார் அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் இந்தநிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரமாண்ட திரைப்படமான மகாவீர் கர்ணா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

மகாவீர் கர்ணா படத்தில் விக்ரமின் கெட்டப் மாஸாக இருக்கிறது எனவே இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த வீடியோ.