சன் டிவியில் பகல் இரவு என முழு நேரங்களிலும் பல விதமான சீரியல்களை ஒளிபரப்பி மக்கள் மற்றும் இல்லத்தரசிகளை மகிழ்வித்து வருகின்றன. அதிலும் சில முக்கிய சீரியல்களுக்கு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. அந்தவகையில் சன் டிவியில் சமீபத்தில் ஒரு புதிய கதைகளத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் கயல்.
இந்த தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 1 தொடரில் நாயகனாக நடித்து மிகவும் பிரபலமடைந்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழி நாயகி சைத்ரா ரெட்டி கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் சில சீரியல் பிரபலங்களும் இந்த தொடரில் நடித்து வருகின்றனர். இப்படி வெவ்வேறு தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள். தற்பொழுது இந்த தொடரின் மூலம் இணைந்து சன் டிவியில் வெற்றி நடை கண்டு வருகின்றனர். மேலும் இந்த தொடர் வந்த சில நாட்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் கயல் சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், ரோஜா போன்ற சீரியல்களுக்கெல்லாம் டப் கொடுக்கும் வகையில் வந்த சில நாட்களே ஆன நிலையில் கயல் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி ஆர் பி யில் மற்ற தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்தையும் ஓரங்கட்டி முதலிடத்தில் உள்ளது.
இதனால் மற்ற சீரியல் பிரபலங்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர். எனவே கயல் தொடர் இனி வரும் நாட்களில் மற்ற சீரியல்களுக்கு நல்ல டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.