உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்துப்போகவே விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு இன்று கோலாகலமாக உலக அளவில் படம் ரிலீசாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் ஆக்சன் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை எடுத்துள்ளார் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு வர தொடங்கியுள்ளது.
கமலுக்கு நிகராக இந்த படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் சூர்யா போன்றவர்கள் நடிப்பும் மிரட்டும் வகையில் இருக்கிறதாம். தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் நிச்சயம் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் எனவும் கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் கமலை விட பிரபல நடிகர் தான் அதிகமான காட்சிகளில் வந்து போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது விக்ரம் படத்தின் முதல் பாதியில் கமலை விட பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள்தான் அதிகம் என்றும் அவர்களும் மிரட்டியுள்ளனர்.
இரண்டாவது பாதியில் கமலுக்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் விக்ரம் திரைப்படம் வேற லெவலில் இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படம் கமலயும் தாண்டி மற்ற முக்கிய நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு நிச்சயம் கொடுக்கும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து அதன் மூன்றாவது பாகத்தில் சூர்யா முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.