ரஜினி நடித்த சிவாஜி படத்தில் இந்த மூன்று நடிகை, நடிகர்களை தான் முதன் முதலில் படக்குழு நடிக்க வைக்க தேர்வு பண்ணியதாம்.? வெளிவரும் தகவல்.

rajini
rajini

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.இவர் பல வருடங்களாக சினிமா உலகில் நடித்து வந்தாலும் தனது மார்க்கெட்டை இழக்க விடாததால் தற்போதும் வெற்றி மேல் வெற்றியை கொடுத்து  ரசிகர்களும், மக்களும் இன்னும் பிடித்த நாயகனாக இருந்து வருகிறார்.

மேலும் அவரது படங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டையை கண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ரஜினி, ஷங்கர் இணையும் படம் நல்ல வரவேற்ப்பு தான். ரஜினி இதுவரை ஷங்கருடன் மூன்று முறை இணைந்துள்ளார். அந்த மூன்று படங்களுமே நல்ல வசூல். அதிலும் முதல் படமான சிவாஜி படத்தில் ரஜினியை வேற லெவல் சம்பவம் செய்திருப்பார்.

ஷங்கர் மற்றும் ரஜினி இணைந்த இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தியது அதுமட்டுமல்லாமல் ரொம்ப நாட்கள் ஓடிய படமாக இதுவும் அமைந்தது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படக்குழு படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்தாம்.

அந்தவகையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரேயாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தான் முடிவு செய்தது. அதுபோல விவேக்கு பதிலாக வெறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தாராம் மேலும் வில்லனாக வேறு ஒரு நடிகர் அசத்த இருந்தார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த மூன்று பிரபலங்கள் வேறுயாருமல்ல..

ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், காமெடியனாக வடிவேலு வில்லனாக பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்கள் தான் முதன்முதலில் படக்குழு நடிக்க தேர்வு செய்து. ஆனால் இந்த மூன்று பிரபலங்களும் அப்போது வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் சிவாஜி படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.