85 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இவர்களின் திரைப்படம் தான் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்துயுள்ளனர் என்னென்ன படம் தெரியுமா.?

threater
threater

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி/ தோல்வியை சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு வருடம் ஹிட் படங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன இதனால் தியேட்டருக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் வருவர்கள் எண்ணிக்கை கம்மியாகி கொண்டே வருகிறது இது நாம் சமீப காலத்தில் பார்த்துள்ளோம் இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்மிடம் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவர் இயக்கி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் ரசிகர் ஒருவர் தியேட்டரில் போய் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்னென்ன என்று கேட்டுள்ளார் அவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டு தகவலை வெளியிட்டுள்ளார் அவர் கூறியது இதில் சிவாஜி திரிசூலம், எம்ஜிஆரின் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் அதிக மக்கள் தியேட்டரில் வந்து பார்த்து வந்தார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு படையப்பா,சந்திரமுகி. தளபதி விஜய்க்கு போக்கிரி மெர்சல் பிகில் ஆகிய படங்கள் என்றும் தல அஜித்துக்கு விசுவாசம் சூர்யாவுக்கு சிங்கம்-2 ஆகிய படங்களை மக்கள் அதிகம் வந்து தியேட்டரில் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டார்.

85 வருட சினிமா வரலாற்றில் அதிக மக்கள் வந்து தியேட்டரில் பார்த்த படங்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது