அந்த விஷயத்தில் எங்களுக்கு குரு நடிகர் சிம்பு தான் – பல வருடம் கழித்து உண்மையை உடைத்த நடிகை நீபா.

actress-neepa
actress-neepa

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கால்தடம் பதித்து வெற்றி கண்டவர் நடிகை நீபா. சின்னத்திரையில் மாநட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தனது திறைமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் தட்டிப் பறித்தார்.

அதன் விளைவாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது சினிமா உலகிலும் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் இவர் விஜயின் காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அசத்தியிருப்பார்.

இருப்பினும் நடிகை நீபாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதை சரியாக கணித்த நீபா தற்போது இவர் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை தீபா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவர் அப்போது நடிகர் சிம்பு குறித்தும் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் அவர் கூறியது.

நான் படித்த ஸ்கூலில் தான் நடிகர் சிம்புவும் படித்தார் ஆனால் அப்போது அவர் எனக்கு சீனியராக இருந்தார். பள்ளிக்கூடத்தில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் எங்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க அவர் தான் வருவார்.

அதுபோல நடிகை நீபாவுக்கு பல தடவை நடனம் சொல்லிக் கொடுத்து உள்ளாராம் நடிகர் சிம்பு.