தளபதி 68 படத்தில் கோ பட வில்லன்..! ட்ரெண்டிங்காகும் விஜய் புகைப்படம்

Thalapathy 68
Thalapathy 68

Thalapathy 68 : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிநடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்களிலும் வசூல் அள்ளும் என எதிர்பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் “தளபதி 68” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

ஒரே ஒரு நூல் பிச்சுகிச்சுன்னா மொத்த மானமும் கப்பலேறிடும்.! வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்

படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு உடனேயே ஷூட்டிங் தொடங்கியது தளபதி விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, எஸ்.ஜே. சூர்யா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சௌத்திரி, மோகன், ஜெயராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்த வருடம் பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் தளபதி 68 ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தளபதி 68 படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leo day 3 box office : மூன்றாவது நாள் வசூலில் தட்டி தூக்கிய லியோ.! நீ அடிச்சா பீசு, நான் அடிச்சா மாஸ் டா..

“கோ” படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த அஜ்மல் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அஜ்மல் தளபதி விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.