லட்டு மாதிரி வெற்றியை ருசித்த கவின்.! ஆத்தாடி தமிழகத்தில் மட்டும் ‘டாடா’ பட வசூல் இத்தனை கோடியா.?

dada-movie
dada-movie

சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் பிறகு சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர்.

இதன் மூலம் பிரபலமான இவருக்கு தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஆனால் அந்த திரைப்படங்களில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு இல்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு இந்நிகழ்ச்சியினை அடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் சமீபத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் டாடா. இந்த படத்தினை கணேஷ் கே பாபு இயக்க மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் விடிவி கணேஷ், பாக்கியராஜ், லட்சுமி, ஹரிஷ் குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி எதிர்பார்த்ததை விட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரையிலும் டாடா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது டாடா திரைப்படம் இதுவரையிலும் தமிழகத்தில் ரூபாய் 14.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கவின் நடிப்பில் வெளிவந்த மூன்றாவது படமான டாடா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய நடிப்பில் இதற்கு முன்பு லிப்ட், நட்புனா என்னனு தெரியுமா, ஊர் குருவி போன்ற திரைப்படங்களில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.