தமிழகத்தில் மட்டும் விஜய்யின் எத்தனை திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.! லிஸ்டில் பீஸ்ட் இணைந்ததா இதோ முழு லிஸ்ட்..

vijay latest
vijay latest

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் வசூல் ரீதியாக பல திரைப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூலை பெறும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது.

ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிய இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்தது அதனால் வசூல் குறைந்து கொண்டே போகிறது.  பலரும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கா இந்த நிலைமை என ஆச்சிரியபட்டுள்ளர்கள் மேலும் சிலர் இதை எதிர்பார்க்க வில்லை என கூறி வருகிறார்கள்.

பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது இந்த நிலையில்  தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்யின் எந்தெந்த திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதை இங்கே காணலாம்.

விஜய்யின் திரைப்பயணத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்கள் என்றால் பிகில், மெர்சல், சர்கார், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் மட்டும் தமிழகத்தில்100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.

விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பூஜை சமிபத்தில் நடந்தது இதில் ரஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியகா நடிக்கிறார் அதுமட்டும் இல்லாமல் சரத்குமாரும் இணைந்துள்ளார் இந்த படத்தில்.