தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் தான் எளிமையாக பழக கூடியவர்கள்.! பிரபல நடிகர் அதிரடி பேச்சி!!

heroes
heroes

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த முடிப்பவர்கள் ரஜினி மற்றும்  அஜித். இவர்கள் இருவரும் தற்போது படத்தில் நடித்துக் கொண்டு வருகின்றார்கள். ரஜினி அவர்கள் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தற்பொழுது அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி போன்ற பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.அது போல தல அஜித் அவர்களும் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.

இவர் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை படத்தை அஜித்தை வைத்து எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் தயாரித்திருக்கிறார். வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாத வண்ணமே இருந்து வருகிறது. படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இப்படம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ajith-rajini
ajith-rajini

இந்நிலையில் நடிகர் ஒருவர் ரஜினி மற்றும் அஜித் இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள் மிக எளிமையான நடிகர் என்பது நாம் அறிந்ததே அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு முன்னணி நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

காமெடி நடிகரான வையாபுரி அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியது திரைத்துறையில் பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன் அவர்கள் மிக எளிமையான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அவருக்கு அடுத்ததாக நான் பார்த்ததில் மிக எளிமையானவர் தல அஜித் அவர்கள் ஒருவர் மட்டுமே என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.