தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் அதிகமாக ரசிகர்களால் பேசப்பட்டு வரும் விஷயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். மேலும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களும் தொடர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஏராளமான அப்டேட்களை கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தினை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று காவியமான இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் கன்னட மொழி ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடித்துள்ள பிரபலங்களின் கேரக்டரின் போஸ்டர் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விக்ரமின் ஆதித்ய கரிகாலன், கார்த்திக்கின் வந்தியதேவன், ஐஸ்வர்யா ராயின் நந்தினி இதனைத் தொடர்ந்து இன்று த்ரிஷாவின் குந்தகை கேரக்டரின் போஸ்டர் வெளிவந்து பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் திரிஷாவின் அழகை தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் வருணித்து வருகிறார்கள் இவ்வாறு பிரபலங்களின் போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.
பொன்னியின் செல்வன் கதைப்படி வந்தியதேவனின் மனைவிதான் குந்தகை அந்த வகையில் கார்த்திக் மற்றும் திரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இருவரும் கேரக்டராக மாறிவுள்ளார்கள். ஏனென்றால் தற்பொழுது திரிஷாவின் இளவரசி குந்தவை வைரலாக நடிகர் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இளவரசி குந்தகைக்கு ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதாவது கார்த்தி திரிஷாவிடம் இளவரசி உங்கள் லைவ் லொகேஷனை அனுப்புங்கள் உங்கள் அண்ணனின் ஓலையை டிராப் அப் பண்ணனும் என்று கிண்டலாக கூறியுள்ளார். இவருடைய பதிவு தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.