நிஜ வாழ்க்கையில் தனக்கு இப்படி ஒரு ஜோடி தான் தேவை – உண்மையை போட்டு உடைத்த ராஷ்மிகா மந்தனா.

rashmika-mandanna
rashmika-mandanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்து உள்ளதால் ராஷ்மிகா மந்தனா சந்தோஷத்தில் இருக்கிறார்.

தற்பொழுது இந்தியிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் மஜ்னு, அமிதாப்புடன் குட்பை ஆகிய திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார். இப்படி சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டியிருக்கும் ராஷ்மிகா மந்தனா சமீப காலமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கில் ஆரம்பத்தில் விஜய்தேவரகொண்டா உடன் காதல் சம்பந்தப்பட்ட நடித்து வந்தார். அதனை வைத்தே தற்போது பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றன அதாவது ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவை காதலிப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால் ராஷ்மிகா மந்தனா அதெல்லாம் ஒன்றுமில்லை என அதிரடியாக மறுத்துவிட்டார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில் எப்படிப்பட்ட ஒருவர் வர வேண்டும் என்பது குறித்து அவர் பேசி உள்ளார். என்னை பொருத்தவரை காதல் என்றால்  ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம் பாதுகாப்பாக உணர வேண்டும்.

காதல் என்றால் என்னால் சொல்ல முடியாது அது ஃபீலிங் சம்பந்தப்பட்டது. அது இரண்டு பேரிடம் இருந்து வரவேண்டும். ஒருவரிடமிருந்து மட்டும் வருவது அல்ல. என கூறி முடித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தன்னா மனிதர்கள் மற்றும் காதல் மற்றும் திருமணம் எப்படி அமைய வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு சிறப்பாக போகிறார் என கூறி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.