பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வசூல் ரீதியாக வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் ரஜினியை வைத்து எந்திரன் என்னும் படத்தை எடுத்து ஒரு புதுமையை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.
எந்திரன் திரைப்படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து ஐஸ்வர்யா ராய், சந்தானம், shriya sharma, காலபவன் மணி, கருணாஸ், டெல்லி குமார், ராகவ், ரேவதி சங்கரன், பாஸ்கர் தீனா மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒருபுதிய ரோபோவை தயார் செய்து ராணுவத்தில் ஒப்படைக்க வேண்டும்.. என்பதே ரஜினியின் கொள்கையாக இருக்கும் அதைக் கொண்டு சேர்த்தாரா என்பது தான் படம். இந்த படம் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாராயின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது.
வேறு ஒரு நடிகர் நடிகையை தான் படத்தில் நடிக்க வைக்க பட குழு திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது அந்த நடிகர் நடிகைகள் வேறு யாரும் அல்ல.. உலக நாயகன் கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா என சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் இருவரையும் வைத்து சில போட்டோ சூட்டுகள் பல எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் இந்த படம் வெற்றி படமாக இருந்திருக்கும் ஆனால் கடைசி நேரத்தில் இவர்கள் நடிக்க முடியாமல் போக பிறகு ரஜினிக்கும் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது அவர்களும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..