பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கதாபாத்திரம் உனக்கு தான் சூப்பராக பொருந்தும் நெப்போலியன்னிடம் சொன்ன பாரதிராஜா..!

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக பலம் வருபவர் பாரதிராஜா இவர் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே இன்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இயக்குனர் பாரதிராஜா திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியும், நடித்தும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இதனால் இவரது மார்க்கெட் இன்னமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் கடைசியாக  நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்தார் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பாரதிராஜாவை பல பிரபலங்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர் அப்படி 90 கால கட்டங்களில் ஹீரோ, வில்லனாக நடித்த பிரபலம் அடைந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது சினிமா உலகில் நடிக்காமல் தனது மகனின் உடல் நிலை பார்த்து கொள்ளவும், அதற்கான சிகிச்சை காரணமாக அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

மேலும் அங்கு பிசினஸ் மற்றும் விவசாயமும் அவர் மேற்கொண்டு வருகிறார்.  இப்படி ஓடிக் கொண்டிருந்த நெப்போலியன். தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை கேள்விப்பட்டதும் நெப்போலியன் இயக்குனர் பாரதிராஜாவை பார்க்க சென்னை வந்தார். நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அப்பொழுது கொஞ்ச நேரம் இருவரும் பேசிக் கொண்டனர்.

இயக்குனர் பாரதிராஜா நடிகர் நெப்போலியன்னிடம் இப்பொழுது உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நீதான்  நடித்திருக்க வேண்டும் உன் உயரத்திற்கும் உடல்வாகவும்  அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருந்திருக்கும் என கூறினாராம். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.