நான் விவாகரத்து பண்ணல.. எங்கள் வாழக்கையில் இதுதான் நடக்குது.? வெளிப்படையாக பேசிய ரஷிதாவின் கணவர் தினேஷ்..!

natchathira
natchathira

சினிமா உலகில் நடிகர் நடிகைகள் எப்படி படங்களில் நடிக்கும் பொழுது காதல் வயப்பட்டு தென் திருமணம் செய்து கொள்கின்றனர். அதேபோல சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகளும் நடிக்கும் பொழுதோ அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய நல்ல குணத்தைப் பார்த்து கவர்ந்து போய் காதல் செய்து பின் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இது மீடியா உலகில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அந்த வகையில் சின்னத்திரையில் மிக பிரபலமானவர்கள்  ரஷிதா மற்றும் தினேஷ். இவர்கள் இருவரும் சின்னத்திரையில் தனித்தனியாகவும் இணைந்தும் நடித்து வந்துள்ளனர் குறிப்பாக இவர்கள் இருவரும் நாச்சியார் சீரியலில் இணைந்து நடித்து அசத்தினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் முடிந்த கையோடும் இருவரும் சேர்ந்து சீரியல்களில் நடித்து அசத்தினர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர்கள் இருவருக்கும் சில பிரச்சினைகள் காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் பல விமர்சனங்கள் பேசப்பட்டது.

அதாவது இருவருக்கும் மிகப்பெரிய சண்டை நடந்தது அதனால் பிரிந்து விட்டனர் இருவரும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினர். ஆனால் உண்மையில் அது நடக்கவே இல்லை.. ரட்சிதாவின் கனவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நாங்கள் பிரிவது குறித்து எந்த ஒரு சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லோர் வீட்டிலும் நடப்பது போல சின்ன மனகசப்பு தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது அதை சரி செய்ய நேரம் எடுத்துக் கொண்டுள்ளோம். எல்லாம் சரியாகி மறுபடியும் இணைந்து வாழ்வோம் என நம்புவோம் இப்பொழுது நடப்பதை காலத்தின் கையில் கொடுத்திருக்கிறோம் என பேசினார். இதை அறிந்த ரசிகர்கள் நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஜோடி நீங்கள் மீண்டும் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.