இந்திய திரை உலகம் ஆண்டுதோறும் பல திரைப்பட நடிகர்களை இழந்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு பல நட்சத்திர நடிகர்களை இழுந்துள்ளது என்று கூறவேண்டும் அந்தவகையில் இர்பான் கான், சேதுராமன், சுஷாந்த் சிங் போன்றோரின் மரணம் இந்திய சினிமாவையும் தாண்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.
அதிலும் குறிப்பாக சுஷாந்த் சிங்கின் மரணம் எல்லோர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் சுஷாந்த் இறந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தற்போது வரையிலும் குரல் கொடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல வாசுகி பாஸ்கர் அவர்கள் சில கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் அதில் தமிழ் சினிமாவிலும் பல சுஷாந்த் இருக்கின்றனர்.அதிலும் குறிப்பாக பலரும் என்னிடம் இது குறித்து நிறைய பேசி உள்ளனர் கூறி அதிர்ச்சி அடைய செய்தார் மேலும் அவர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது தல அஜித்தை நினைத்து பாருங்கள் அவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்திருப்பார் என்று கூறினார்.
இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் தல அஜித்அவர்கள் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்து இருப்பார் என நினைத்து கண்கலங்கி வருகின்றனர்.