மங்காத்தா திரைப்படத்தில் அஜித்திற்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

ajith-arjuin
ajith-arjuin

in mangatha movie before ajith this actor would act :தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இவர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, லட்சுமி ராய், அர்ஜுன், ஆண்ட்ரியா, வைபவ் பிரேம்ஜி, என பல பிரபலங்கள் நடித்து வெளியாகிய திரைப்படம் மங்காத்தா, இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஜாலியான திரைப்படத்தை இயக்குவதில் வல்லவர். அதேபோல் தான் இந்த மங்காத்தா திரைப்படத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இயக்கியிருந்தார். மங்காத்தா திரைப்படத்தில் விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் அஜித்திற்கு முன்னதாக நடிக்க இறந்தது விவேக் ஓபராய் மற்றும் சத்யராஜ் தான் முதலில் இவர்களிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் பின்பு கைவிடப்பட்டது.

அதன்பிறகு தல அஜித் தானாகவே முன்வந்து இந்த கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என கூறி நடித்துள்ளாராம், விநாயக் மகாதேவ் கதாபாத்திரத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கனகச்சிதமாக செதுக்கி இருப்பார். அந்த அளவு அஜித்தின் கதாபாத்திரம் மங்காத்தா திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.

அதேபோல் நடிகர் அர்ஜுன் இந்த திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்திருப்பார், இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மங்காத்தா திரை படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை கண்டிப்பாக நடைபெறும் எனவும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.