தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கார்த்தி தனது சினிமா கெரியரிலேயே இந்தப் படத்தைப் போல் வேறு எந்த படமும் இவருக்கு பாராட்டுகளை தரவில்லை.
அதோடு இதுவரையிலும் கார்த்திக் நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம் தான் ஒரே நாளில் அதிகபடியான வசூல் செய்துள்ளது. இப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்திருந்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் இன்று தான் ரிலீசானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இத்திரைப்படம் தெலுங்கில் உள்ள சில படங்களில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறிவருகிறார்கள்.
இத்திரைப்படத்தில் கார்த்திற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தான் ராஷ்மிகா முதல்முறையாக தமிழ் நடிகையாக அறிமுகமாகிறார். ஆனால் இதற்கு முன்பே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நெப்போலியன், மலையாள நடிகர் லால் உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனால் இவர்களைவிட ரசிகர்கள் தற்போது சுல்தான் திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்திருந்தால் யுவன் ஷங்கர் ராஜாவை தான் ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடி வருகிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிக்கும் மிக அருமையாக பின்னணி இசை அமைத்து இருப்பதால் இவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இத்திரைப்படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எனவே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.