வெறும் 21 நாளில் தமிழகத்தில் வசூலில் பட்டைய கிளப்பிய பொன்னியின் செல்வன்.! இதுதான் மொத்த வசூல்..

ponniyin-selvan
ponniyin-selvan

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது மேலும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் நாவலை பல இயக்குனர்கள் இயக்குவதற்காக முன் வந்த நிலையில் அனைவருக்கும் ஏதோ ஒரு தடுக்கலால் இயக்க முடியாமல் போனது மேலும் பலருக்கும் பிடித்த கதையாக பொன்னியின் செல்வன் அமைந்திருந்தது இவ்வாறு மணிரத்தினமும் 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தினை உருவாக்கியுள்ளார்.

எனவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்பொழுது இந்த படத்தினை பற்றி அப்டேட் கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டியது. மேலும் ப்ரோமோஷன்காக பட குழுவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் இவ்வாறு இந்த படத்தில் முன்னணி நடிகர்களான சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.

இவ்வாறு பல முன்னணி நட்சத்திரங்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக ரூபாய் 500 கோடி பொருட் செளவில் உருவானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது மேலும் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அதிக அளவில் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் மூன்று வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 200 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறது இது ஏராளமான திரைப்படங்களின் வசூல் வேட்டையை ஓவர் டேக்ஸ் செய்து முன்னணி வகித்துள்ள நிலையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் கொண்டாடப்பட்டு வருகிறது.