கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தேவர்மகன். இத்திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதில் ரஜினி பட நடிகைதான் நடிக்க இருந்தாராம். ஆனால் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு பின்பு படக்குழுவினர்கள் வேணாம் என்று கூறிவிட்டார்களாம்.
இப்படம் சிவாஜி, கமல், ரேவதி மற்றும் கௌதமி போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து இப்படத்தில் நடித்து இருந்தார்கள். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதற்கு சிவாஜி,கமல் எவ்வளவு முக்கியமோ அதுபோல ரேவதியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவும் இஞ்சி இடுப்பழகி பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இப்படத்தில் ரேவதிக்கு பதில் முதலில் மீனா தான் நடித்து வந்தாராம். ஆனால் படக்குழுவினர்கள் இப்படத்திற்கு ரேவதி செட்டாக மாட்டார் என்று கூறிவிட்டார்களாம் அது மட்டுமல்லாமல் படக்குழுவினர்கள் கொஞ்சம் முத்துன முகமாக இருக்கணும் என்று கமல்ஹாசனிடம் கூறியிருந்தார்கள்.
எனவே கமல் மீனாவிடம் நேரடியாக நீங்கள் கொஞ்சம் இளம் பருவமாக இருக்கிறீர்கள் இப்படத்திற்கு கொஞ்சம் முத்துன முகமாக இருக்க வேண்டும் எனவே இப்படத்தில் இங்கு நடிக்க வேண்டாம் என்று கூறினாராம். அதனை மீனாவும் ஏற்று சரி என்று கூறிவிட்டு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடித்திருந்தார். பிறகு தான் ரேவதி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகினார்.