விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி 58 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மேலும் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 13 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன் முன்னிலையில் இருப்பதால் அவரை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வது போல் தெரிகிறது. அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விக்ரமணியிடம் ஆயிஷா மிகவும் ஆவேசமாக பேசுகிறார்m இதை செய்ய வேண்டாம் அதை செய்ய வேண்டாம் என்று எதற்காக சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று மிகவும் கோபத்துடன் கேட்கிறார்.
அதனை அடுத்து ஏடிகே போட்டி இருக்கும் வேஷத்தை விக்ரமன் கிண்டல் செய்கிறார் எனவே போட்டிருக்கும் வேசத்திற்கும் நீங்கள் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற அதற்கு பதில் அளித்த ஏடிக்கே நீங்கள் லாஜிக் பார்க்க வேண்டாம் இது பர்ஃபார்மென்ஸ் பண்ற இடம் இங்கே வேறு என்ன வெங்காயத்தை பண்றது என்று கேட்கிறார்.
அதனை அடுத்து என்னை நீங்கள் டார்கெட் செய்கிறீர்கள் என்று விக்ரமன் கூற அதற்கு ஏடிக்கே நீங்கள் எத்தனை பேரை டார்கெட் செய்தீர்கள் என்று நான் கூறுகிறார். அதனை அடுத்து நான் இனிமேல் உங்களிடம் பேச விரும்பவில்லை என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறியவுடன் இந்த ப்ரோமோ முடிவு எடுக்கிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் விக்ரமணியிடம் சண்டை போட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அசிம் செய்யும் தவறுகளால் மக்களுக்கிடையே இவருக்கென இருக்கும் மார்க்கெட் குறைந்திருக்கும் என விக்ரம் சொன்ன நிலையில் அது தவறு என பிறகு தெரியவந்தது. அதாவது கமலிடம் அசிம் இவர்கள் சொல்வதை வைத்து நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் வெளியில் என்ன நடக்கும் என்பதை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும் என கூற உடனே ரசிகர்களின் கைத்தட்டல் சத்தம் அரங்கையே அதிர வைக்கிறது இதனால் விக்ரமன் உள்ளிட்ட சக போகட்டியாளர்களின் முகமும் மாறுகிறது.
#Day59 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/h4Vzp8xvVb
— Vijay Television (@vijaytelevision) December 7, 2022