அவுங்களுக்கு எந்த முன்னுருமையும் கிடைக்க கூடாது.! தனது பிள்ளைகள் பற்றி மாணவியின் கேள்விக்கு தளபதியின் தரமான பதில்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் மிகவும் ரசிகர் பட்டாளத்தை அதிகமாக கொண்டிருப்பவர் தளபதி விஜய் தான். உச்ச நட்சத்திரமாக சினிமாவில் பல ஆண்டுகாலமாக ஜொலித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் உலக அளவில்  பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 200 கோடிக்கு மேல் வசூல் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி 65 திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து தளபதி ரசிகர்கள் தளபதியை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். தளபதி விஜய் சங்கீதா என்பவரை திருமணம் காதலித்து செய்து கொண்டார்.இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் சாஷா என்ற மகளும் உள்ளனர்.

தளபதி விஜய்க்கு திருமணமாகி இதுவரையிலும் 20 வருடங்கள் முடிந்து விட்டது. இவருடைய மகன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா இருவருமே சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் சஞ்சய் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரா வரா வேட்டைக்காரன் பாடலுக்கு நடனமாடி இருப்பார்.  மகள் சாஷா தெறி திரைப்படத்தில் கிளைமாக்சில் கிளைமக்ஸ் நடித்திருந்தார்.

மேலும் சஞ்சய் கனடா மாநிலத்தில் படம் இயக்குவதற்கான படிப்பை முடித்துள்ளார். விரைவில் இவர் படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இதனைதொடர்ந்தே சாஷா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் கலந்துள்ளார்.அதில் இவருடைய ரசிகையான ஒரு மாணவி நடிகர் விஜயிடம் நீங்கள் ஏன் உங்கள் மகன் சஞ்சய் மகள் சாஷா இவர்களின் புகைப்படம் ஒன்றை கூட வெளிவராமல் மறைத்து வைத்திருக்கிறார்கள் அதற்கான காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த விஜய் அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கிடைக்காமல் அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்களின் புகைப்படம் கூட வெளியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த பழைய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.