சில மணித்துளியில் ஜகமே தந்திரம் தனுஷை போல் வேடம் அணிந்த பெண் ரசிகர்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க ஆரம்பித்து தற்பொழுது உலக அளவில் பிரபலமடைந்து ஹோலிவுட்டில் நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.

அந்தவகையில் அசுரன், கர்ணன் தொடர்ந்து இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு தனுஷிற்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.அந்த வகையில் இன்னும் மூன்று வருடங்களில் 9 திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது தனுஷ் கோலிவுட்டில் த கிரே மேன், கார்த்திக் நரேந்திரன் உடன் ஒரு படம், செல்வராகவனுடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது. நேற்று ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாகும் என்று கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு பெண் சில நிமிடங்களில் தனுஷ் போல் மேக்கப் செய்து கொண்டு வேடம் அணியும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அச்சு அசல் தனுஷை போல் மாறி இருப்பதால் இது பொண்ணா இல்லை பையனா என்று தெரியாத அளவிற்கு மேக்கப் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.