தற்பொழுது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வரும் நிலையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இதனை அடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்டு வரும் வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா ஹிந்தியில் மட்டும் நான்கு திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவர் முக்கியமாக விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தான் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது இந்த படத்தில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வந்தனர். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் கிடைத்துள்ளது மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வாறு தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை ராஷ்மிகா குறித்த தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா ஹைதராபாத், மும்பை, கோவா, கூர்க் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஐந்து சொகுசு பங்களா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முக்கியமாக இந்த ஐந்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதனால் இவ்வாறு ராஷ்மிகா மந்தன சொந்தமாக பங்களா வாங்கி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அனைவரும் அதிர்ச்சடைந்தனர் இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த பதிவை பார்த்த நிலையில் “அது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்’ எனவும் பதிவு செய்துள்ளார் இவ்வாறு இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.