46 வருடத்தில் இந்த ஒரு நடிகருக்கு மட்டும் ஒரு தடவை கூட இசையமைக்காத இளையராஜா..? காரணத்தை தெரிஞ்சா நீங்களே ஷாக்காவீங்க..

ilayaraja-
ilayaraja-

இசை என்றால் நாம் நினைவிற்கு வரும் முதல் பெயர் இசைஞானி இளையராஜா தான்.. இவர் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் பல படங்களுக்கு சூப்பராக இசையமைத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் இவர் முதலில் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்னும் படத்திற்கு இசையமைத்தார்.

அதன் பிறகு பாலச்சந்தர், பாக்கியராஜ்  என தொடங்கி பல இயக்குனர்களுக்கு கீழ் இவர் இசை அமைத்துள்ளார். மறுபக்கம் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், ராமராஜன், ராஜ்கிரண் போன்ற நடிகர்கள் தொடங்கி இந்த காலகட்டத்தில் இருக்கும் இளம் நடிகர் நடிகைகள் வரை இசையமைத்து வருகிறார்.

40 வருடங்களுக்கு மேலாக ஓடும் இவர் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் இசையமைத்ததே இல்லையா அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 80,90 காலகட்டத்தில் இசைஞானி இளையராஜாவை கமிட் செய்த பிறகு தான் நடிகர், நடிகைகளையே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள் அப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருந்தது.

பலருக்கும் ஆச்சரியம் தான் அந்த நபர் வேறு யாரும் அல்ல நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி ஆர் ராஜேந்திர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இளையராஜாவுடன் கூட்டணி அமைக்காதது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. டி ராஜேந்தர் ஒரு படத்தை அவரே இயக்கி, நடிக்கிறாரோ அதேபோல அவரே தனது படத்திற்கு இசையமைத்துக் கொள்வதும் வழக்கம்.

அதனால் இசைஞானி இளையராஜா இவரது படத்திற்கு தேவையில்லாமல் போனாராம்.. ஏன் கடைசியாக கூட டி ராஜேந்தர் நடித்த வீராசாமி படத்திற்கு கூட அவரே  இசையமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.