ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறன அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இதுவரை 119 படங்கள் வெளியாகி உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசித்துள்ளது என்னதான் கமர்சியல் ஹிட் பிளாக்பஸ்டர் என்று பல திரைப்படங்களை கூறினாலும் உண்மையான வெற்றியைப் பெற்று 50 நாட்களுக்கு மேல் ஓடி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் சில திரைப்படங்கள் மட்டுமே.
அந்த வகையில் தமிழ் சினிமாவை கொண்டாடும் வகையில் வெற்றி பெற்றுள்ள நான்கு திரைப்படங்களை பற்றி இங்கே காணலாம். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் இருந்து திரைப்படங்கள் வெளிவர தொடங்கியது அதில் ஜனவரி மாதம் 16 திரைப்படமும் பிப்ரவரி மாதம் 21 திரைப்படமும் வெளியானது.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய அயலான் திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை குறிவைத்து வெளியிடப்பட்டது இந்த திரைப்படம் பல வருடங்களாக திரையிட முடியாமல் தவித்து வந்தார்கள் அதற்கு காரணம் பண பற்றாக்குறை தான் இந்த திரைப்படம் 75 கோடி வரை வசூல் செய்திருந்தது.
மக்களைக் கவர்ந்த நான்கு திரைப்படங்கள்.
கோடை விடுமுறையை குறி வைத்து வெளியாகிய திரைப்படம் அரண்மனை 4 இந்த திரைப்படத்தை சுந்தர் சி அவர்கள் தான் இயக்கியிருந்தார் 40 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதிலும் இந்த கோடை விடுமுறையில் ஐபிஎல் எலக்சன் என பல இருந்தாலும் அதை தாண்டி மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளியது.
என்னதான் காமெடி ஹீரோவாக நடித்திருந்தாலும் தானும் ஒரு ஹீரோ என நிரூபித்தவர் சூரி இவரின் இரண்டாவது திரைப்படம் தான் கருடன் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து சூரி தனித்துவமான நடிப்பை வெளிகாட்டி கருடன் திரைப்படத்தை வெளியிட்டார்கள்.
கருடன் திரைப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது ஒரு காமெடி ஹீரோவாக இருந்து ஹீரோவாக தன்னுடைய வெற்றியை நிலைநாட்டினார் சூரி.
அதேபோல் விஜய் சேதுபதி தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது தரமான திரைக்கதை இருந்ததால் இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது திரையரங்கில் 50 நாட்கள் வரை இந்த திரைப்படம் ஓடி சாதனை பெற்றது.