நடிகர்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து தன்னையும் வளர்த்துக் கொள்கின்றனர் ஒரு கட்டத்தில் புகழின் போதையில் சில நடிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகப்பெரிய பிரச்சனைகளில் மாட்டி கொள்கின்றனர். அப்படி 2023 -ல் மாட்டிய 5 பிரபலங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்..
விஷால் : ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்து விஷால் கடைசியாக நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய 100 கோடி வசூல் செய்தது. 2023ல் விஷால் ஒரு தரமான சம்பவத்தையும் செய்துள்ளார் ஒரு ப்ரொமோஷனில் தயாரிப்பாளர்கள் நாலு கோடி பணம் எடுத்துட்டு வந்து படம் எடுக்கணும்னு ஆசைப்படாதீங்க.. அதுக்கு பதிலா உங்க பிள்ளைகளை அந்த காசை வைத்து படிக்க வையுங்க டெபாசிட் பண்ணுங்க என கூறி பிரச்சனையை வாங்கிக் கொண்டார்.
விஜய் : 2023 -ல் பொங்கலுக்கு விஜயன் வாரிசு படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து லியோ திரைப்படமும் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. வாரிசு படத்தின் சக்சஸ் மீட்டிங் பொழுது நடிகர் சரத்குமார் மேடை ஏறி சூப்பர் ஸ்டார் விஜய் என சொல்ல மக்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது பல பிரச்சனைகளை சந்தித்தது கடைசியாக லியோ சக்சஸ் மீட்டில் மேடை ஏறிய சரத்குமார் சூப்பர் ஸ்டார் பட்டம் ஒருவருக்கு தான் அது ரஜினி தான் எனக்கூறி இந்த பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
ரஜினி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்போதுமே ரசிகர்கள் கவரும்படி பேசுவது வழக்கம் அப்படி ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் வழக்கம்போல ஏறி குட்டி கதை சொன்னார். விஜயை தாக்கி தான் ரஜினி பேசினார் என பலரசிகர்கள் கொந்தளித்தனர் இன்று வரை அது ஓய்ந்தபாடில்லை.
மன்சூர் அலிகான் : 90களில் பிரபலமான வில்லனான மன்சூர் அலிகான் மீண்டும் இரண்டாவது இன்னிசை தொடங்கி காமெடி மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் அண்மையில் லியோ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் கைவசம் சரக்கு படம் வைத்திருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தேவையில்லாமல் திரிஷாவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் மாட்டினார்.
மாரி செல்வராஜ் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்றவர்கள் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன் படம் வெளிவந்து பிளக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர்மகன் குறித்து அவருடைய கருத்தை கூறி இருந்தார்.
அதாவது சாதிய அடிப்படையாக காட்டி இசைக்கி ஜாதியை தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் படம் தான் தேவர் மகன் எனக் கூறியிருந்தார் ஆனால் படத்தில் அந்த மாதிரி எந்த காட்சிகளும் இடம் பெறாமல் வன்முறை வேண்டாம் பிள்ளைகளை நல்லபடியாக வைத்து வையுங்கள் என்று கருத்துக்களை தான் கமல் பேசி இருப்பார். இப்படி பேசியது அப்பொழுது பெரும் சர்ச்சையாக மாறியது.