2022 – ல் ராசி இல்லாத நடிகை இவர்தான்..! கிளாமர் மட்டும் பத்தாது கொஞ்சம் திறமையும் காட்டணும்..

nayanthara-thrisha-dhamana

மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது இதனால் தமிழ் பக்கம் அவர் அடுத்ததாக அடி எடுத்து வைக்காமல் தெலுங்கு பக்கம் தாவினார் தொடர்ந்து அங்கு ஹிட் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய ஒரு டாப் நடிகையாக மாற்றிக்கொண்டார்.

மேலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினார் தொடர்ந்து இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவியதால் இவரை பலரும் புக் செய்தனர். இருப்பினும் 2022 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டேவுக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை ஏனென்றால் இந்த வருடத்தில் இவர் நடித்த நான்கு படங்கள் பெரிய அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை.

pooja hecte
pooja hegde

இதனால் இந்த வருடத்தில் ராசி இல்லாத நடிகையாக இவர் இருக்கிறார் 1. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ராதே ஷியம்.. இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகி இருந்தது. ஆனால் படம் வெளிவந்து மண்ணைக் கவியது.

2. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே இந்த படம் ஒரு ஆக்சன் படமாக உருவாகி இருந்தாலும் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. 3. தெலுங்கு டாப் ஹீரோ சிரஞ்சீவி ராம்சரண் நடிப்பில் உருவான ஆச்சாரியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே

இந்த படம் 140 கோடி பட்ஜெட்டில் வெளியானது ஆனால் ஒட்டு மொத்தமாக 75 கோடி மட்டுமே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4. இந்த ஆண்டு கடைசியில் பூஜா ஹெக்டே நடித்த திரைப்படம் சர்க்கஸ் இந்த படத்தில் பூஜா ஹெக்டே உடன் கைகோர்த்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது.