ஒரு படத்தின் வெற்றியோ தோல்வியோ அந்தப் படத்தில் யார் நடிக்கிறாரோ அவர்கள் தலையில்தான் கொண்ட விடியும் இப்படி 2022 ல் பல திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தோல்வியை சந்தித்தாலும் ஒரு சில இயக்குனர்கள் தங்களால் முடிந்தவரை ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களாக கொடுத்துள்ளார்கள். அப்படி 2022-ல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்…
பிரதீப் ரங்கநாதன் – லவ் டுடே:- 2019 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதி பிரம்மநாதன் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் நடிகராக அறிமுகமான முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்- விக்ரம்:- கைதி, மாஸ்டர், திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர், திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவை பல விமர்சகர்கள் படாதபாடுப்படுத்தினார்கள். அப்படி தொங்கி கிடந்த தமிழ் சினிமாவை உயர்த்தியவர் லோகேஷ் கனகராஜ் இவர் அடுத்ததாக தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
எச் வினோத் – வலிமை:- சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச். வினோத் அஜித் அவர்களை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் தற்போது ஹெச் வினோத் அவர்கள் மறுபடியும் அஜித்தை வைத்து மூன்றாவதாக துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்தினம்- பொன்னியின் செல்வன் 1 :- செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பொன்னின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மதியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கிய மணிரத்தினம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு இந்திய அரசு இவருக்கு 2002 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் நீல் :- 2014 ஆம் ஆண்டு போக்ரம் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் நீல் அதன் பிறகு அடுத்தடுத்த பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்தார் அதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படங்கள் மூலம் இயக்குனர் பிரசாந்த் நீல் மிகவும் பிரபலமானார்.
ராஜமவுலி :- ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் ராஜமவுலி பலராலும் அறியப்பட்டார்.
நெல்சன்:- நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான நெல்சன் அதன் பிறகு தனது இரண்டாவது படமான பீஸ்ட் திரைப்படத்தை விஜயை வைத்து இயக்கி பிரபலமானார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாய திரைப்படத்தை இயக்கிய எம் மணிகண்டன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, இரவின் நிழல் படத்தை இயக்கி நடித்த பார்த்திபன், உள்ளிட்ட பலர் இந்த ஆண்டு தங்களுடைய திரைப்படங்களில் மூலம் பிரபலமாகி உள்ளனர்.