இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்

iman annachi

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இமான் அண்ணாச்சி ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற சேட்டை கொஞ்சம் அரட்டை என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் என்ற நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மனதை கவர்ந்தவர்.

இவர் திரை உலகில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து மரியான், நய்யாண்டி உட்பட தனுஷின் படங்களில் நகைச்சுவை நடிகராக  தன் நடிகர் பயணத்தை தொடங்கினார். இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன், கோ, நீர்பறவை, ஜில்லா,பூஜை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்பொழுது இவர் ஒரு பேட்டியில் தனது சிறிய கால வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அதில் நான் ஒரு சிறிய பள்ளியில்தான் படித்தேன் எனக்கு ஆசிரியராக இருந்த அவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். தற்பொழுது இணையதளத்தில் இவருடைய மனைவியின் புகைப்படமும் குடும்பத்தினர் புகைப்படமும் வைரல்லாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Actor-Imman-Annachi
Actor-Imman-Annachi