நயன்தாராவின் உண்மையான காதலுக்கு திருட்டுப்பட்டம் தான் கிடைச்சது.! திட்டி தீர்த்த பிரபல நடிகரின் மனைவி..

NAYANTHARA2
NAYANTHARA2

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அந்த வகையில் அடுத்தடுத்து திரைப்படங்களை நடித்து வந்த நயன்தாரா நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் பொழுது காதலில் விழுந்தார் சில ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு தேவாவுடன் காதலில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் முதல் மனைவி பிரச்சனை கொடுத்ததால் அதிலிருந்து விலகினார்.

பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயன்தாராவை படும் கேவலமாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருமணமான கணவர்களை திருடுபவர் என்றும் அவரைப் பார்த்தால் அறைந்து விடுவேன் என்றும் மிகவும் ஆவேசமாக பேசி இருந்தார் இதனால் நயன்தாரா பிரபுதேவாவை காதலித்ததால் பல அவமானங்களை சந்தித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் மாட்டிக் கொண்டார் நயன்தாரா இவ்வாறு பல எதிர்ப்புகள் இருந்தும் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு நிகராக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பிக்க இரட்டை ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு பிறந்துள்ளது எனவே இதற்கு மேல் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்.