தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீப பேட்டி ஒன்றில் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் தோல்வி அடைந்ததற்கு நான் தான் காரணம் என கூறிய நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் மற்றும் மாதவன், திரிஷா உள்ளிட்ட பலரின் கூட்டணியிலும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மன்மதன் அம்பு.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த நிலையில் அந்தப் படம் சரியாக ஓடவில்லை இந்த படத்தின் தோல்வி குறித்த அன்மையில் பேசிய உதயநிதியின் ஸ்டாலின் அவர்கள் அதில் கமலஹாசன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கேற்றார் போல் மன்மதன் அம்பு திரைப்படத்தினை தயாரித்தேன் ஆனால் அந்த திரைப்படம் சரியாக ஓடாததற்கு நான் தான் முழுக்க முழுக்க காரணம் என உதயநிதி தெரிவித்தார்.
ஏனென்றால் அந்த திரைப்படத்தினை இயக்கி கே .ஸ் ரவிக்குமார் முதலில் தலைவன் இருக்கிறான் அல்லது வேறு ஏதேனும் ஆக்சன் திரைப்படங்களை இயக்கலாமென கூறினார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஆப்ஷன் திரைப்படங்கள் தற்போது வேண்டாம் கமலஹாசனை வைத்து பஞ்சதந்திரம், வம்மல் கே சம்பந்தம் போன்ற காமெடி திரைப்படங்களைப் போல இயக்கங்கள் என கே.எஸ் ரவிக்குமாரிடம் தெரிவித்தாராம்.
எனவே அவர் கூறியது போலவே கே.எஸ் ரவிக்குமார் அவர்களும் படத்தினை தயாரித்துள்ளார் எனவே அந்த படம் பாடும் தோல்வினை சந்தித்தது இதன் காரணமாக பல நாட்கள் மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் இன்று வரை கமலஹாசன் போன்ற மிகப்பெரிய நடிகரை எப்படி வச்சு செஞ்சி விட்டேன் என நினைத்து தப்பு பண்ணி விட்டோமோ என்று உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உதயநிதி நினைப்பதற்கு முக்கிய காரணம் அண்மையில் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு தான் உதயநிதி இவ்வாறு கூறுகிறார் என்பது பெரிய வருகிறது. மேலும் இது குறித்த உதயநிதி மன்மதன் அம்பு திரைப்படத்தில் கொடுத்த தோல்வியை விக்ரம் திரைப்படத்தில் ஈடுகட்டி வெற்றி கொடுத்ததற்கு பின் தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பிறகு கமலஹாசன் தற்பொழுது என் படங்களை தயாரிக்கிறார் இது எல்லாம் தனக்கு வியப்பாக உள்ளது என நெகிழ்ச்சி உடன் உதயநிதியின் ஸ்டாலின் அவர்கள் சமீப பேட்டியில் கூறியுள்ளார். தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலககத் தலைவன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.