இந்திய சினிமா உலகில் பல்வேறு மொழி திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மன்றம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகின்றன அந்த லிஸ்டில் கன்னட சினிமாவும் உண்டு. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவானது.
இந்த படம் எச்டி படத்தில் படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு இருந்ததால் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது அந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியது. KGF படம் சொந்த மொழியையும் தாண்டி தெலுங்கு,தமிழ், மலையாளம் என வேறு மொழிகளில் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து உடனேயே இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவானது. ஆனால் தொடர்ந்து பல்வேறு தடைகளை சந்தித்ததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு வந்தது ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. கன்னட சினிமாவையும் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இருந்து இதுவரையில் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், TOOFAN பாடல், டிரைலர் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து பிரபாஸுடன் கைகோர்த்து சலார் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் KGF 2 படத்தின் ட்ரெய்லர் குறித்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ஒரு புதிய பதிவை போட்டு இருந்தார் அதற்கு பதிலளித்த இயக்குனர் பிரஷாந்த் நீல் விஜய்யை பெரிய திரையில் காண காத்து இருக்க முடியவில்லை. விஜயின் பீஸ்ட் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.