சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழுமைமாக தெரிந்து கொள்ள ரொம்பவும் காத்துக் கொண்டிருக்கிறேன். பிரபல வில்லன் நடிகர் பேட்டி..

arun-vijay
arun-vijay

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஓடிக்கொண்டிருக்கிறார் இதனால் அவர் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இப்பொழுது கூட பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன் என அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்ப்பதால் இவருக்கான வெற்றி விகிதம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படங்களை தாண்டி விக்ரம் 2 படத்திலும் இவர் நடிக்க இருக்கிறார் ஆனால் எப்போது ஷுட்டிங் தொடங்கும் என தெரியவில்லை ரசிகர்கள் விக்ரம் 2 படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா பின்னி பெடலெடுத்து விட்டார் அதனால் இரண்டாவது பாகத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து பிரபலமடைந்து உள்ளவர் அருண் விஜய்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஒவ்வொரு திரைப்படமும் வெளிவர ரெடியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அருண் விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யாவின் ரோலக்ஸ் குறித்து பேசி உள்ளார்.

விக்ரம் படத்தில் சூர்யா கடைசி அஞ்சு நிமிடம் வந்தாலும் அந்த காட்சி மிரட்டும் வகையில் உள்ளது. அவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் முழுவதையும் தெரிந்து கொள்ள நான் ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் இச்செய்தி தற்போது சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இந்த செய்தி இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.