நடிகர் விஷால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் இவர் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மை காலமாக இவர் நடிக்கும் படங்கள் தோல்வி படங்களாகவே இருந்து வந்துள்ளன. இதனால் விஷாலின் மார்க்கெட்டும் சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மீண்டு வர விஷாலும் தொடர்ந்து படங்களில் நடித்துதான் பார்க்கிறார். ஆனால் ஒண்ணும் முன்னேற்ற பாடு கிடையாது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் லத்தி சார்ஜ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுவும் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட வில்லன்களை அடித்து நொறுக்குவது போல ஒரு காட்சி இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. லத்தி படத்தை வினோத்குமார் இயக்கியுள்ளார் பொன்ராம் இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளார் இந்த படத்தில் விஷால் உடன் கைகோர்த்து சுனைனா மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது இந்த படத்தை மலை போல் விஷாலும் எதிர்பார்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் மற்றும் லட்சுமிமேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்பொழுது லஷ்மி மேனனிடம் லிப் லாக் சீன்களில் நடிப்பீர்களா என கேட்டிருந்தார் அதற்கு அவர் கதைக்கு தேவை என்றால் நடிப்பேன் என கூறினார்.
இதை கேட்ட நடிகர் விஷால் சுசி.. இது முதல்லயே தெரிஞ்சுருந்தா என வருத்தப்படுகிற மாதிரி பேசி சிறிதார், ஏனெனில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் லட்சுமி மேனன் இணைந்து பாண்டியநாடு என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இந்த மாதிரி எந்த சீனும் இல்லை அதை குறிப்பிடும் வகையில் விஷால் நினைத்து சிரித்தார்.