விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி போன்றுவர்கள் நடித்து உள்ளனர். இந்த கூட்டணி ஏற்கனவே ஒரு முறை நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்து இந்த திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது புதிதாக நடிகை சமந்தா மட்டும் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது போஸ்ட் புரோமோஷன் வேலைகள் நடத்தப்பட்டு வருகின்றன அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது முதலில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் OTT தளத்தில் தான் வெளியாக இருந்தது ஆனால் தற்போது படக்குழு திரையரங்கில் வெளியிட்டு பின் வேண்டுமானால் OTT தளத்திற்கு கொடுக்கலாம் என முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படக்குழுவும் முனைப்பு காட்டி வருகிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அடுத்தடுத்த பாடல்களை எதிர்நோக்குகின்றனர் இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர்களின் படத்தின் பெயர்கள் என்ன என்பது குறித்து நேற்று அறிவித்து இருந்தார்.
விஜய் சேதுபதி ராம்போ என்ற பெயரில் நடிப்பதாகவும் சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது தற்போது நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரும் இந்த படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திரப்பதாக கூறினார்.
மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாரா வின் பெயரை மென்ஷன் செய்துவிட்டு அவர் சில கேப்டனாக சில வார்த்தைகளை குறிப்பிட்டு பேசி உள்ளார் அதில் அவர் கூறியது நான் உன்னுடன் சேர்ந்து படம் பண்ணும்போது செம்ம உற்சாகமாக ஃபீல் பண்ணுகிறேன் என் தங்கமே என கூறியுள்ளார் விக்னேஷ் சிவன் இதை பார்த்த அனிருத், சூர்யா போன்றோர் வரவேற்று உள்ளனர்.