சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருமாறி உள்ளவர் தல அஜித். சினிமா உலகில் பல தோல்வி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது ரசிகர்கள் படத்தையும் தாண்டி அவரை நேசிப்பதால் இப்பொழுதும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல அஜித்தும் அவ்வப்போது ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். தற்போது கூட அஜித் இயக்குனர் ஹச். வினோத் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் பைக் ஸ்டுண்ட் வைத்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அஜித் அவ்வபொழுது பழைய மற்றும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் அஜித்தை வைத்து உன்னை தேடி படத்தை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார் அதில் ஒரு சமயத்தில் அஜித்திற்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டதாம் அதனால் அஜித் சினிமாவில் இருந்து விலகப் போவதாக முடிவு செய்திருந்தாராம் ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை.
தனது நம்பிக்கையின் மூலம் மீண்டு இப்போதுவரையிலும் சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் இது எனக்கு மிகப்பெரிய ஒரு வியப்பை கொடுத்துள்ளது என இயக்குனர் சுந்தர்சி சமீபத்தில் தெரிவித்தார். இப்போதும் அஜித்துக்கு பல்வேறு உடம்பு ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் என்பது உண்மை.