தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் அவர்கள் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான் பிரபலமடைந்தார்.
இவர் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கவலைவேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவரது வாழ்க்கையை திருப்பி போட்டது 2018 ஆம் ஆண்டு இந்த ஆண்டில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கின்ற அடுல்ட், காமெடி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார் இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடையத் தொடங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ஜாம்பியா என்ற திரைப்படம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது இதிலும் தனது கவர்ச்சியை வெளிக்காட்டி மேலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவர்கள் சமீபத்தில் அஜித்தை பற்றி ட்விட் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியது அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என நானும் ஆசைப்படுகிறேன். என்னைப் போன்று வேறு யாராக இருக்கிறீர்கள் என பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எங்களுக்கும் வேண்டும் என்று ஆசையாக பதிவு செய்தனர் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் அவர்களை நீங்கள் யாருடைய ரசிகை என்று கேட்டனர் அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் தல ரசிகை என்று கூறினார். அவரது படத்தில் background காட்சியில் இருந்தால்போதும் எனவும் அவர் தெரிவித்தார் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருந்தார்.
#ThalaAjith sir ?❤️ https://t.co/hynIgNK4yz
— Yashika Aannand (@iamyashikaanand) March 6, 2020
மேலும் யாஷிகா ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் அஜித்துடன் நடிக்க ஆசையா என கேட்டனர். ஆமாம் அவரிடம் போய் சொல்லுங்கள் நான் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னால் கேட்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
— Yashika Aannand (@iamyashikaanand) May 26, 2019