பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடியவர் இவர் கடைசியாக இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க கமலுடன் கைகோர்த்து ஷூட்டிங் தொடங்கினார். முதல்கட்ட சூட்டிங் தொடங்கியதில் இருந்து இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் கிரேன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சிலர் உயிரிழந்தனர்.
இதனை எடுத்து படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லாமல் போனதால் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பக்கம் தாவி ராம்சரனுடன் முதல் முறையாக கைகோர்த்து RC 15 என்னும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்.மறுபக்கம் கமலோ லோகேஷ் உடன் கைகோர்த்து விக்ரம் படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகினார். இருப்பினும் லைக்கா நிறுவனம் ஏற்கனவே சில கோடிகளை செலவு செய்ததால் இனி இந்தியன் 2 எடுக்காமல் இருந்தால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து..
ஒரு வழியாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கரை அழைத்து சுமுகமாக பேசி முடிவு கட்டி உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என முன்பே பேசப்பட்டு இருந்தது இதற்காக நாயகன் கமலஹாசனும் அமெரிக்கா சென்று உடல் எடையை சரி செய்து படத்தில் இணைவார் என சொல்லப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சங்கரும் எப்படியாவது சீக்கிரமே RC 15 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியன் 2 படத்தை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படி இருந்தாலும் இந்த படத்தில் ஆரம்பத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் படத்தில் இருந்து விலகி உள்ளனர் மேலும் சினிமா உலகை விட்டு மறைந்து விட்டனர்.
அந்த வகையில் விவேக், நெடுமுடி வேணு ஆகியோர்கள் உயிரிழந்தனர் மேலும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என சொன்ன செய்தி பெரிதாக பேசப்பட்டது இதனால் காஜல் அகர்வாலுக்கு பதிலாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன இப்படி இருக்கின்ற நிலையில் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறீர்களா இல்லையா என கேட்டுள்ளனர். அதற்கு காஜல் அகர்வால் யார் சொன்னது அதுபோன்ற செய்திகளை நானும் கேட்டேன் அது எல்லாம் முற்றிலும் வதந்தி நான் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதி இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது என அடித்து கூறி உள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் குதித்து வருகின்றனர்.