முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விரும்பன் இந்த படத்தில் ஹீரோயின்னாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோளகாலமாக அரங்கேறி முடிந்த நிலையில் இன்று விருமன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது.
அப்பொழுது நடிகை அதிதி சங்கரும் இந்த படம் குறித்தும், நடிகர் கார்த்தி குறித்தும் பேசி உள்ளார் அது பற்றி விலாவாரியாக தற்போது பார்ப்போம். இதுவரை நான் வீட்டை விட்டு வெகு தூரம் சென்றதே இல்லை பட ஷூட்டிங் இன் போது வெளியில் தங்கி இருந்தாலும் என் குடும்பத்தை நான் மிஸ் பண்ணவே இல்லை காரணம் அனைவரும் என்னை மிகவும் நன்றாக பார்த்து கொண்டார்கள்..
அவங்க வீட்டு பொண்ணு போல என்னை பார்த்துக் கொண்டார்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தேன். மேலும் நடிகர் கார்த்தி பற்றி அவர் பேசியது கார்த்தி சார் எனது பக்கத்து வீட்டுக்காரர் அவரை தினமும் பார்த்து வணக்கம் போட்டுவிட்டு தற்பொழுது அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.
தினமும் நான் கார்த்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் தினமும் புதிய புதிய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார். கார்த்தி சாரும் அவரது திரை வாழ்க்கையை கிராமத்து கதையிலிருந்து தான் தொடங்கினார். நானும் அதே போல் கிராமத்து படத்திலிருந்து என் திரை பயணத்தை தொடங்கியுள்ளேன்.
அவரைப் போலவே நானும் பெரிய இடத்திற்கு செல்வேன் என நம்புகிறேன் என பாசிட்டிவாக பேசி முடித்தார் இது அங்கு இருப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது முதல் படத்தில் நடித்திருந்தாலும் பெரிய நடிகைகள் போல பேசுகிறார் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என கூறி வந்தனர்.