உனக்கு மியூசிக் பத்தி என்ன தெரியும்..? பிரபல நடிகரை மேடையில் அசிங்கப்படுத்திய இளையராஜா..!

elaiyaraja
elaiyaraja

Ilayaraja who made the famous actor ugly on stage: தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் தன்னுடைய இன்னிசை யான குரலை பதித்து இன்றும் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசைஞானி இளையராஜா.

இந்நிலையில் தன்னுடைய 78வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வந்த இளையராஜாவுக்கு சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் அந்த வகையில் பார்த்திபன் இளையராஜாவுக்கு அவருடைய பாணியில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

elaiyaraja birthday
elaiyaraja birthday

“கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம்.என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி. தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம், கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம், ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம்-but பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம். உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன்,அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு இளையராஜா அவர்கள்.  (பக்தி= அகம் நோக்கி ஊர்தல்) பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன்,பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே… அதுதான் அறியாமை”

இவ்வாறு பார்த்திபன் வெளியிட்ட பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் இளையராஜாவை நேரில் வைத்து அசிங்கப்படுத்தியவர் தானே இன்று என்ன அவரை நல்லவர் போல் புகழ்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன் அவரே ஒரு மேடை அவரே ஒரு அனுபவம் என ரசிகர்களுக்கு புரிந்தும் புரியாத மாதிரி அவருடைய பாணியில்  பதிலளித்திருந்தார்.

parthipan
parthipan

இந்நிலையில் விகடன் விருது விழா ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற நடிகர் பார்த்திபனுக்கு வாய்ப்பு கிடைத்தது அப்போது இளையராஜாவிடம் பார்த்திபன் கேள்வி எழுப்பும் போது இளையராஜா உனக்கு மியூசிக்கை பற்றி என்ன தெரியும் என பார்த்திபன் மூஞ்சி உடையும் படி கலாய்த்து இருப்பார்.