சொல்லி அடித்த கில்லி.. சவால் விட்டு ஜெயித்த இளையராஜா.. தேசிய விருதை வென்றது இப்படி தானா..

ilaiyaraja latest
ilaiyaraja latest

அப்பொழுதைய காலகட்டத்தில் சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதில் பாடல் நல்லா இருக்கிறதா காமெடி நல்லா இருக்கா என அனைவரும் பார்ப்பார்கள் அந்த வகையில் பாடலுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிந்து பைரவி இந்த திரைப்படத்தை கே பாலச்சந்திரன் இயக்கியிருந்தார் 1985 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் பாடலுக்காகவே ஓடியது.

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இளையராஜா இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பார். சிவகுமார், சுகாசினி, சுலோச்சனா, ஜனகராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது கிட்டத்தட்ட 12 பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ரசிகர்களாலும் மக்களாலும் கொண்டாடப்பட்ட இந்த படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

விஜய் டிவி ஆபிஸ் சீரியலில் நடித்த மதுவை ஞாபகம் இருக்கிறதா.. தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

சிறந்த இசையமைப்பாளர் சிறந்த பாடகி சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் இளையராஜா சித்ரா சுஹாசினி ஆகியோர்களுக்கு  வழங்கப்பட்டது இந்த திரைப்படத்திற்கு முன்பு இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு எப்பொழுதும் போல் பணியாற்ற முடியாமல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான மாறி மாறி நின்னே என்ற தியாகராஜனின் தெலுங்கு கீர்த்தனைக்கு பின் சுகாசினி மக்களுக்கு புரியும் வகையில் தமிழில் நாட்டுப்புறப் பாடல் பாடுங்கள் என்று சிவகுமாரிடம் கேட்பார். அதற்கு சிவகுமார் கோபப்பட்டு நீங்கள் வேண்டுமென்றால் பாடுங்கள் என கோபப்படுவார்

அந்த காட்சிக்குப் பிறகு பாடறியேன் படிப்பறியேன்  என்ற பாடலை சுகாசினி பாடுவார் இந்தப் பாடலுக்கு தான் இளையராஜா மிகுந்த சிரமத்தை எடுத்தாராம் இந்த பாடலுக்கு முன் சிவகுமார் படிக்கும் தெலுங்கு கீர்த்தனைக்கான ராகத்தில் நாட்டுப்புறப் பாடலை எப்படி சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு இசை புக்கை புரட்டிய பொழுது அந்தப் பக்கத்தில் இந்த பாடலுக்கான அடித்தளமும் ராகமும் எழுதப்பட்டிருக்கிறது உடனே இளையராஜா அந்த ட்யூனை ஆரம்பித்திருக்கிறார் அதன் பிறகு தான் பாடறியின் படிப்பறியேன் என்ற உண்மையான நாட்டுப்புறப் பாடலை ஆரம்பித்தார்கள்.

நயா பைசா வாங்காமல் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்… அட இதனால்தான் சம்பளம் வாங்கவில்லையா…

பாடல் பதிவு முடிந்த பிறகு கே. பாலச்சந்திரன் அவர்களிடம் இளையராஜா இந்தப் பாடலுக்கு திரையரங்கில் கைதட்டல் விழவில்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் என சவால் விட்டுள்ளார் அதேபோல் இளையராஜா சொன்னது போல் திரையரங்கில் இந்த பாடலுக்கு கைதட்டல் பறந்துள்ளது அதுமட்டுமில்லாமல் தேசிய விருதும் கிடைத்தது.