தன்னுடைய மகன் பிறந்த செய்தியை அழகாக கூறிய இளையராஜா.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்றால் அதற்கு முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கும் உண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தி அவர்களை மகிழ்விப்பது இசை தான். அந்த வகையில் இசை என்பது வாழ்வில் ஒரு பங்காக இருந்து வருகிறது அந்த வகையில் ஒரு சில இசமைப்பாளர்கள் ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் ராக்ஸ்டாராக இருந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையாால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென கட்டி போட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய 43வது பிறந்தநாள் முன்னிட்டு ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு யுவனின் தந்தையும் இசைஞானியுமான இளையராஜா ஒரு வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மகன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்துள்ளார் என்பதை பற்றிய தகவலை கூறியுள்ளார் அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஆழியாறு அணை அருகில் ஏதேனும் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தான் நான் அப்பொழுது இசையமைத்து இருப்பேன். அப்படி தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் இயக்குனர் மகேந்திரனுடன் ஜானி படத்திற்கு இசையமைக்க சென்றிருந்தேன் அப்பொழுது தயாரிப்பாளர் கே.ஆர்.ஜிக்கு கோவையில் வீடு இருக்கிறது. அங்கு சென்று திரும்பி வந்தார் அப்பொழுது நான் எனக்கு யுவன் பிறந்த செய்தியை அவர் கூறினார் அப்பொழுது கூட நான் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன் என யுவன் பிறந்த சமயம் நடந்த கதையை கூறி யுவன் ஹாப்பி பர்த்டே என கூறியுள்ளார்.