Ilayaraaja: இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இவருடைய இசையமைப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவருடைய இசையமைப்பில் கடைசியாக வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளியானது இதனை அடுத்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் இளையராஜாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அதாவது 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார் மேலும் அன்னக்கிளி படத்தின் வெற்றினைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த சமயத்தில் பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வர எவர்கிரீன் கூட்டணி உருவானது அப்படி பாரதிராஜா-இளையராஜா இருவரும் சேர்ந்து தங்களது இசையால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றனர். பீக் இயக்குனர்களின் திரைப்படங்களில் பணியாற்றி வந்த இளையராஜா எந்த அளவுக்கு இயக்குனர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவுக்கு மோதலையும் சந்தித்தார்.
பாரதிராஜா பாலச்சந்தர் ஆகியோர்களுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர். இவ்வாறு பாரதிராஜா உடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலச்சந்தர் உடன் கடைசி வரை பிரச்சனை சரியாகவில்லை. இளையராஜா கடைசி வரை பிரியாமல் பணியாற்றிய ஒருவர் தான் பாலு மகேந்திரா.
இளையராஜாவும் பாலும் மகேந்திராவும் இணைந்து வீடு, மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், அது ஒரு கனாக்காலம், வண்ண வண்ண பூக்கள், தலைமுறைகள் என பல படங்களில் பணியாற்றி உள்ளார்கள். இந்த சூழலில் இவர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட ஆரம்பித்துள்ளது அதாவது பாலு மகேந்திரா இயக்கிய ஒரு படத்திற்கு இளையராஜா பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தபோது இந்தந்த இடத்தில் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்னாராம் இதனால் இளையராஜா பாலு மகேந்திரா மீது கோபப்பட்டு உள்ளார் அதன் பிறகு இளையராஜா பாலு மகேந்திராவும் பிரிந்து விட்டார்.
இந்த சமயத்தில் இளையராஜாவிடம் பாலு மகேந்திரா ஒரு நதி ஆரம்பிக்கும் இடத்தை நதி மூகம் என்கின்றார்கள் அதன் தொடக்கம் முதல் கடலில் கலக்கும் வரை எப்படி எல்லாம் செல்கிறது என்று யோசித்து பாருங்களேன். சிறிய ஊற்றாக ஆரம்பித்து போகப் போக சற்று தள்ளி அருவியாகவும் பிறகு சிற்றருவி கலந்து காட்டறவியாக மாறும். பிறகு ஒரு பெரிய பாறையில் இருந்து தோன்றி இறைச்சலுடன் நீர் வீழ்ச்சியாக கொட்டி காட்சி அலிக்கும்.
பிறகு செல்லும்போது பரந்த நீர் தேக்கம் ஆகி அதிக ஆழத்துடன் அமைதியாக காட்சியளித்து கூழாங்கற்களுடன் உரசியபடி வழிந்து ஓடும் சிலு சிலு என்ற சத்தம் நமது மனதை அல்லும் பிறகு நில இடங்களில் அது பாயும் நிலத்தடி நீர் ஆகிவிடும் அது போல் ஆரம்பம் முதல் கடைசி வரை உருவாகுமாறு அனைத்தையும் தீர்மானிப்பது நிலத்தின் அமைப்பே. அதே போல் தான் இசையும், ஒரு படத்தின் இசையும் பின்னணி இசையும் தீர்மானிப்பது திரைகதைகள் தான் மட்டுமல்ல ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு என சினிமாவில் இருக்கும் அனைத்தையும் முடிவு செய்வது திரைக்கதைகள் தான் என பாலு மகேந்திரா விளக்கம் அளித்துள்ளார் இதனைக் கேட்டு இளையராஜா வாயடைத்து போனதாகவும் கூறப்படுகிறது.