bhavatharini : இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் திடீரென காலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவர் புற்று நோயால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்.
மேலும் பவதாரணி புற்றுநோய் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றுள்ளார் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார் இவர் ஐந்து மாதங்களாகவே உடல்நல பிரச்சனை மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார் அதனால் சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார்.
ஆனால் இன்று திடீரென சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5:20 மணிக்கு மரணம் அடைந்துள்ளார் நாளை மாலை அவரது உடல் சென்னை வர இருக்கிறது இவருக்கு தற்பொழுது வயது 47 சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடலை பாடியுள்ளார் இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பவா தாரணி பின்னணி பாடகி இசையமைப்பாளரின் மகள் கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி மேலும் இவர் அதிகமாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் இசையமைத்த படங்களில் மட்டுமே பாடியுள்ளார்.
இளையராஜா இசையில் பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு இவர் தான் பின்னணி பாடகியாக பாடினார் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது அதேபோல் ராசையா திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதேபோல் இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ரா மை பிரண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் மேலும் தெலுங்கு உலகிலும் நுழைந்தார்.
ஒரு காலகட்டத்தில் சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி சென்னை ரோசாரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர் அதேபோல் அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது வித்தியாசமான குரல் வளத்தை கொண்ட இவரின் பாடல் தனித்தன்மை வாய்ந்தது அதனால் மிக எளிதாக இவரது குரலை கண்டுபிடித்து விடலாம்.