சாவுக்கு வர சொன்னா கருமாதிக்கு வந்திருக்க.! சூரியை கண்ட மேனிக்கு திட்டிதீர்க்கும் ரசிகர்கள்…

soori

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரி இவர் இன்று உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் நடித்து அறிமுகமான திரைப்படமான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் தான் ஹரி வைரவன். அதன் பிறகு குள்ளநரி கூட்டம் போன்ற சில திரைப்படங்களில் மட்டும் தலை காட்டிய ஹரி அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

சில காலங்கள் சினிமா பாக்கம் வராமல் இருந்த நடிகர் ஹரியை பிரபல youtube சேனல் ஒன்று அவரைப் பேட்டி எடுத்திருக்கிறது அப்போது அவருடைய மனைவி வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர்தான் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேஞ்சிடு மேரேஜ் தான் நடந்தது ஆனால் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்து வந்தோம்.

ஒரு சமயத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக சரியில்லாமல் போனது அது மட்டுமல்லாமல் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் இதனால் இவர் இறந்துவிட்டார் என்று பலரும் கூறினார்கள் ஆனால் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் அப்போது ஒரு சில பிரபலங்களிடம் உதவி கேட்டு அணுகி இருந்தேன் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் எனக்கு உதவினார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஹரி வைரவன் இன்று இறந்துவிட்டார் இவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இவருடன் சேர்ந்து நடித்த சூரி அவர்கள் இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தியை கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரத்தில் தவிக்கும் குடும்பத்திற்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி என பதிவு செய்திருக்கிறார்.

soori
soori

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது நல்லா இல்லை ஹரி உயிருடன் இருக்கும் போது அவருக்கு யாருமே உதவி செய்யலை சூரி அண்ணா உங்களையும் குறிப்பிட்டு தான் சொல்கிறேன் இறந்ததற்குப் பின் இரங்கலை பதிவு செய்வதால் என்ன பலன் என்று சூரியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

soori