நீங்கள் ஓகே சொன்னால் போதும் உங்களை பணத்தில் படுக்க வைக்கிறேன்..! லோகேஷ் காக போட்டி போடும் தயாரிப்பாளர்கள்..!

lokesh-kanagaraj-1
lokesh-kanagaraj-1

சினிமாவை பொருத்தவரை நல்ல நேரம் வந்தாலே போதும் எட்டாத உயரத்திற்கு கூட எளிதாக சென்று விடலாம் அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்தி தற்போது  உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து திரைப்படம் இயக்கும் அளவிற்கு வளர்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 400 கோடிக்கு மேலாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்காக நடிகர்  கமலஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக  கொடுத்திருந்தார். பொதுவாக ஒருவர் வெற்றி கொடுத்து விட்டாலே போதும் அவர்களுடைய சம்பளத்தில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான் ஆனால் லோகேஷ் அப்பாடி கிடையாது பணத்தை விட படத்தில் மட்டுமே அதிக அளவு கவனம் செலுத்துபவர்.

இன் நிலையில் சினிமாவை நேசித்து நேசித்து  திரைப்படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜன் திரைப்படங்களில் நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆசைப்படுவது வழக்கமாகி போய்விட்டது அது மட்டும் இல்லாமல் தற்போது தயாரிப்பாளர்களும் லொகேஷன் திரைப்படத்தை தயாரிக்க மிகுந்த அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதன்படி திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதனால் அவருக்கு பல்வேறு ரசிகர்கள் பெருமக்கள் உருவாவது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி 67 வது திரைப்படத்தை  இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சுமார் 35 கோடியை சம்பளமாக வழங்க திட்டமிட்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயார் என ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன் நிலையில் லோகேஷன் தளபதியின் திரைப்படத்தை மாபெரும் வெற்றி திரைப்படமாக கொடுக்க வேண்டும் என அயராது போராடி வருகிறாராம்.