கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக நடிகை திரிஷா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இப்படத்தில் இவருக்கு முன்பாக பார்வதி நாயர் தான் கமிட்டாகி இருந்தாராம். ஆனால், ஏதோ காரணத்தினால் அவர் இப்படத்தில் வில்லனாக வரும் அருண் விஜய்க்கு ஜோடியாக மாற்றப்பட்டிருந்தது.
என சமீபத்தில் பார்வதி நாயர் அவர்கள் பேட்டி ஒன்றில்
பகிர்ந்து கொண்டார்.இதனால் அவரது ரசிகர்கள் மனம் உடைந்து போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.