மணிரத்தினத்தின் கனவு திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் எனக்கு கொடுத்தால் நான் தாராளமாக நடிப்பேன்..! தளபதி விஜய் ஆசைப்பட்ட கேரக்டர்..!

vijay-12
vijay-12

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாக்கி அதில் முதல் பாகத்தை இந்த ஆண்டில் வெளியிட உள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை பட குழுவினர்கள்  மிக விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படம் டீசர் என்று வெளியாக உள்ளதால் திரை பரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம், வந்திய தேவனாக கார்த்திக், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா மேலும் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி ஆகியவர்கள்  நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழியாகவும், சோபித்த மாணவியாகவும், சரத்குமார் பெரிய பழு வேட்டையராகவும் பார்த்திபன் சிறிய வேட்டையாராகவும்  நடித்துள்ளார்கள் இவ்வாறு அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு அப்போது இருந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஆசை இருந்துள்ளது அந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார் அதேபோல திரைப்படத்தில் இவர் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டார்.

அதேபோல சூர்யா கமலஹாசன்  ஏன் தளபதி விஜய் கூட இந்த திரைப்படத்தில் வந்த தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரிய வந்த நிலையில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு கார்த்திக் தான் கரெக்டான ஆள் என மணிரத்தினம் முடிவு செய்துவிட்டார்.