நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வலம் வருகிறார். இவர் தமிழில் தனுஷ் விக்ரம் விஜய் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து ஒருகட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் அதிகம் டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத..
பட்சத்தில் மற்ற மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதை தொடர்ந்து பல மொழி படங்களை கைப்பற்றி நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்திசுரேஷ் ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது சில கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் அவரது நாயுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அவரது நாயை தனி விமானம் ஒன்றை புக் செய்து அதில் அழைத்து சென்றுள்ளார்.
விமானத்தில் கீர்த்தி சுரேஷ் அவரது நாயுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல விதமான கமெண்டுகளை பெற்று வருகின்றனர்.